பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா?....சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் துவங்கிடுச்சு

Jan 04, 2025,07:12 PM IST

சென்னை: சென்னை சென்ட்ரல் டூ நாகர்கோவில், மற்றும் தாம்பரம் டூ கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜனவரி 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் என சொல்லக்கூடிய பொங்கல் பண்டிகை உழவுத் தொழிலுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில்  மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் பொங்கல் பண்டிகை மற்றும் அதனை ஒட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறை விடப்படுகிறது.

இந்த விடுமுறை நாட்களில் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். அந்த சமயத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பேருந்து மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் அலைமோதுவது வழக்கம். மேலும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிப்பதற்காகவும், தென் மாவட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் பயணம் செல்வதாலும், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி தாம்பரம் டூ கன்னியாகுமரி, மற்றும் சென்னை சென்ட்ரல் டூ நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஜனவரி 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தாம்பரம் டூ கன்னியாகுமரி: 



ஜனவரி 13ஆம் தேதி இரவு 10.30மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் (06093) மறுநாள் மதியம் 12:30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும்.

ஜனவரி 14ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில்(06094), மறுநாள் அதிகாலை ஆறு 15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில், வழியாக இயக்கப்படுகின்றன.


சென்னை சென்ட்ரல் டூ நாகர்கோவில்:

ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்படும் ரயில்(06089) மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

 ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில்(06090), மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். 

இந்த ரயில்கள் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, வழியாக இயக்கப்படுகின்றன என அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!

news

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!

news

கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !

news

புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!

news

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்

news

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!

news

ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!

news

தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்