மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Apr 21, 2025,06:37 PM IST

வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைந்து விட்டார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாடிகன் சிட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 


88 வயதான போப்பாண்டவர் பிரான்சிஸ், வாடிகன் சிட்டியில் உள்ள தனது அதிகாரப்பூ்ாவ போப் இல்லத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் சிகிச்சை பெற்று வந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ். ஈஸ்டர் தினத்தையொட்டி நடந்த பிரார்த்தனையின்போதும் கூட அவர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியிருந்தார்.


உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணியளவில் போப்பாண்டவர் மரணமடைந்ததாக கார்டினால் கெவின் பாரல் அறிவித்துள்ளார். கடவுளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த போப்பாண்டவர் நம்மிடிருந்து பிரிந்து விட்டார். இயேசுவின் உண்மையான சீடராக கடைசி வரை திகழ்ந்தவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.




கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போப்பாண்டவர். பல நாட்கள் அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது. படிப்படியாக நிலைமை மோசமாகியும் வந்தது. அவருக்கு நிமோனியா பிரச்சினை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 38 நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில், பின்னர் வாடிகன் இல்லத்திற்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது இறுதிச் சடங்குகளை மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் என்று போப்பாண்டவர் கேட்டுக் கொண்டிருப்பதாக கார்டினால்கள் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இறுதிச் சடங்கு நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது.


போப்பாண்டவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

பிக் பாஸ் தமிழ் .. சீசன் 9.. அக்டோபர் 5ம் தேதி முதல்.. வீடுகள் தோறும் இனி கலகலதான்!

news

SIR திட்டத்தையே மொத்தமாக ரத்து செய்ய நேரிடும்.. சுப்ரீம் கோர்ட் திடீர் எச்சரிக்கை

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. தேதி நீட்டிப்பு கிடையாது.. ஐடி துறை அறிவிப்பு

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

உயிரின் சிரிப்பு

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்