PR Helen Poems: இரு மனம் இணையும் திருமணம்.. குலமகள் வருகையின் நறுமணம்!

Apr 17, 2026,02:56 PM IST

பி.ஆர். ஹெலன்


திருமணம்


திரு என்ற அடைமொழியுடன் 

இரு மனம் இணையும் திருமணம் 

மணமகனோ வரும் (வந்திணையும்) திருமதி குறித்த கலக்கத்துடன்


இயல்பு வாழ்க்கையது

மாறப் போகும் நடுக்கத்துடன்


மணமகனின் பெற்றோருக்கோ 

குலமகளின் வருகைக்கான எதிர்பார்ப்புடன் 


மணமகளின் பெற்றோருக்கோ

அன்பு மகளின் எதிர்காலம் குறித்த கனவுடன் 




ஒவ்வொடு மணங்களிலும்.

ஒவ்வொடு எதிர்பார்ப்பு இருந்தும் 

பலர் மனம் வாழ்ந்த 

இரு மனங்களின் சங்கமிப்பு மட்டுமே 

திருமணம்


--


குழந்தை


அன்புடன் நீ பார்க்கும் பார்வையில் 

பரவசமடைகின்றேன்


அழகுடன் நீ சிரிக்கும் சிரிப்பில்

சிறகடிக்கின்றேன்.


கட்டியணைத்து நீ முத்தமிடுகையில் 

கண்களில் ஈரமதை ஏந்துகின்றேன்.


உன் பார்வை உன் சிரப்பு உன் முத்தம்.


மொத்தமுமாய் என்னை இழக்கின்றேன்.

யாரம்மா நீ !


ஓஓ


என் குழந்தையின் குழந்தையல்லவா நீ


(P.R. ஹெலன், கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்ப்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.மிகுந்த திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும், நேர்மையும் கொண்ட ஒரு சிறந்த ஆசிரியர். ஏராளமான தமிழ்க் கவிதைகளை இயற்றியுள்ளார். இவர் கற்பித்த பாடத்தில் SSLC தேர்வில் 100 சதவீத தேர்ச்சி முடிவை (Centum result) பெற்றுத் தந்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்