சென்னை: சென்னைக்கு திடீரென கிளம்பி வந்த அரசியல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜயை இன்று மாலை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் வீட்டில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது. கிட்டத்தட்ட 2 3/4 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
இந்த சந்திப்பின்போது தமிழக வெற்றி கழகம் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. உண்மையில் ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டின் பேரில்தான் பிரஷாந்த் கிஷோர் சென்னை வந்து விஜயை சந்தித்ததாக கூறப்படுகிறது.

வருகின்ற சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு சாதகமாக வியூக வகுத்து கொடுக்க பிரஷாந்த் கிஷோரை விஜய் தரப்பு அணுகியுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது எந்த ஒரு முடிவும் எட்டப்பட்டதாக தெரியவில்லை. முதற்கட்ட பேச்சுவார்த்தையாக இது கருதப்படுகிறது. மீண்டும் இவர்கள் பேசுவார்களா என்பதும் தெரியவில்லை.
இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டார். அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி திமுக செயல் பட்டு ஆட்சியைப் பிடித்தது. பத்து ஆண்டு காலமாக ஆட்சியை அதிமுகவிடம் பறிகொடுத்திருந்த திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த பிரச்சார உத்திகளும் முக்கிய காரணம் ஆகும்.

அதேபோல கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு விஜய்க்கு பிரஷாந்த் கிஷோர் ஆலோசகராக வியூக வகுப்பாளராக செயல்படுவாரா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
இனிமேல் நான் தேர்தல் வியூக வகுப்பாளராக ஈடுபட போவதில்லை என்றும் முழு நேர அரசியல் செய்ய போவதாகவும் ஏற்கனவே பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார். மேலும் அவர் பீகார் மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் என்பதும் நினைவிருக்கலாம்.
தவெக கட்சிக்கு ஏற்கனவே தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி செயல்பட்டு வருவது நினைவிருக்கலாம். ஒரு வேளை அவரை நீக்கி விட்டு பிரஷாந்த் கிஷோரை கொண்டு வர முயல்கிறார்களா அல்லது பிரஷாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் திட்டங்களை ஜான் ஆரோக்கியசாமி தலைமையில் விஜய் முன்னெடுக்கவுள்ளாரா என்பதும் தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}