கூட்டணி அமைத்தால் மட்டும் போதாது.. பாஜகவை வீழ்த்த இது தேவை.. பி.கே. அட்வைஸ்!

Mar 21, 2023,12:22 PM IST

டெல்லி: பாஜகவுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்தால் மட்டும் போதாது. அதை மட்டும் வைத்துக் கொண்டு பாஜகவை வீழ்த்த முடியாது. மாறாக, பாஜகவின் பலம் என்ன என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும். அதை உணர்ந்து திட்டம் தீட்டி செயல்பட்டால் மட்டுமே பாஜகவை வீழ்த்துவது குறித்து நினைத்துப் பார்க்கலாம் என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.


பாஜகவுக்கு எதிரான பிரமாண்டக் கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன. முக்கியமான எதிர்க்கட்சிகள் இணைந்து ஓரணியாக திரண்டால் நிச்சயம் பாஜகவை வீழ்த்தி விடலாம், 2024ல் பாஜகவுக்கு கடும் நெருக்கடியைத் தரலாம் என்று முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.


ஆனால் அது மட்டும் பாஜகவை வீழ்த்த போதாது என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார். இவர்தான் நரேந்திர மோடி பிரதமராக வருவதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர். மோடி தலைமையிலான முதல் பாஜக அரசு மத்தியில் ஆட்சியைப் பிடிக்க பிரஷாந்த் கிஷோர்தான் வியூகம் வகுத்துக் கொடுத்த பிதாமகன் என்பது நினைவிருக்கலாம்.



பாஜகவுக்கு எதிரான வியூகம் குறித்து பிரஷாந்த் கிஷோர் NDTVக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கொள்கை ரீதியாக பிரிந்து கிடப்பவர்கள் தேர்தலுக்காக இணைவதில் எந்த பலனும் கிடைக்காது. அப்படிப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் எந்த லாபமும் கிடைக்காது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது பலவீனமாக இருக்கிறது. வெறுமனே கட்சிகளும், தலைவர்களும் இணைந்தால் மட்டும் போதாது.


பாஜகவுடன் மோத வேண்டுமானால் அதன் பலங்களை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்துத்வா, தேசியவாதம், நல அரசியல்.. இதுதான் பாஜகவின் முக்கியமான தூண்களாக உள்ளது. இதை உடைக்க வேண்டும். குறைந்தது இரண்டையாவது உடைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பாஜகவை எதிர்க்க முடியும்.


இந்துத்வா கொள்கைக்கு எதிராக காந்தியவாதிகள், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரியவாதிகள் என சகல தரப்பினரும் ஒரே கொள்கையுடன் திரள வேண்டும். மாறாக யார்  யாருடன்  பேசுகிறார்கள்..யார் விருந்து வைக்கிறார்கள்.. யாருடன் யார் டீ சாப்பிடுகிறார்.. இதெல்லாம் வேலைக்கு ஆகாது. மாறாக கொள்கை உருவாக்கம் வேண்டும். கொள்கை அடிப்படையில் அனைவரும் இணைய வேண்டும்.  அதுவரை பாஜகவை வீழ்த்த முடியாது. அந்த வகையில் பார்த்தால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில் பாஜகவை வீழ்த்தும் சக்தியைப் பார்க்க முடியவில்லை.


ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோதோ யாத்திரையால் என்ன லாபம் கிடைத்தது என்பது இதுவரை தெரியவில்லை.  ஆறு மாத காலம் அவர் மேற்கொண்ட யாத்திரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது, விமர்சனங்களும் கூடவே வந்தது. ஆனால் ஆறு மாதத்திற்குப் பிறகு ஏதாவது மாற்றம் இருக்க வேண்டும் அல்லவா.. ஆனால் அப்படி எந்த மாற்றத்���ையும் என்னால் காண முடியவில்லை.  தேர்தலின்போதுதான் யாத்திரைக்கு பலன் கிடைத்ததா என்பதை நாம் அறிய முடியும் என்றார் பிரஷாந்த் கிஷோர்.


சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்