கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

Aug 29, 2025,03:59 PM IST

தூத்துக்குடி: கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். மக்கள் பிரச்சனையை கேளுங்கள். அரசியல் என்பது மக்களுக்காகத்தான். ஆட்சி என்பதும் மக்களுக்காகத்தான். மக்கள் நலமாக இருந்தால்தான் இந்த நாடே நன்றாக இருக்கும் என்று விஜய் குறித்த கேள்விக்கு காட்டமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு நடக்கிறது. அரசியலில் மட்டுமல்ல, தேர்தலிலும் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. கண்கூடாகவே ஓட்டுக்கு காசு கொடுப்பது  நடக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால், பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். கூட்டணி ஆட்சி கண்டிப்பா தமிழ்நாட்டில் வரணும். தேர்தல் ஆணையமும், நீதிபதிகளும் ஜனநாயக நாட்டில் நேர்மையான, முறையான தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும். அப்போதுதான், நாங்கள் தேர்தலில் நிற்பதற்கே ஒரு அர்த்தம் இருக்கும். 




2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தென் மாவட்டங்களுக்கு உள்ளம் தேடி, இல்லம் நாடி கேப்டன் ரதம் விரைவில் வரவுள்ளது. மக்கள் மத்தியில் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. கூட்டணி பற்றி எல்லாம் நீங்களாக கற்பனை செய்துகொண்டால் நான் பதில் சொல்ல முடியாது. நாங்கள் எங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் அதுபற்றி நாங்களே அறிவிப்போம். தவெக குறித்த  கேள்வியைத் தவிர வேறு கேள்வியே இல்லையா. 


தமிழகம் முழுவதும் தினமும் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். இந்த ஒரு கேள்வியைத் தவிர வேறு கேள்வியை கேட்பதில்லை. நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். நான் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்?. மக்கள் பிரச்சனையை பேசுங்க உப்பளத் தொழிலாளர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கப்பல் தளம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் என எத்தனையோ இருக்கின்றன. 


பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்கிறோம். நீங்கள் ஏன் மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர மறுக்கிறீர்கள்?. கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். மக்கள் பிரச்சனையை கேளுங்கள். அரசியல் என்பது மக்களுக்காகத்தான். ஆட்சி என்பதும் மக்களுக்காகத்தான். மக்கள் நலமாக இருந்தால்தான் இந்த நாடே நன்றாக இருக்கும். இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!

news

திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!

news

கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

news

Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?

news

விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது

news

சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்