சென்னை: பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 8ம் தேதி முதல் 100க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை காவல்துறையினர் தினசரி கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவிடுத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்வதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தின் போது காவல்துறையினர் காலையில் கைது செய்வதும், மாலையில் விடுவிப்பதும் தினந்தோறும் வாடிக்கையாக உள்ளது. இதை தேமுதிக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியாக 181ல் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார் என்றும் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை.
தேர்வு எழுதி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப் படுத்தாமல், கண்ணீர் மல்க வாழ்ந்து கொண்டிருக்கும் 160 ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவணம் செய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்த தவறான மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்டது மெட்டா!
திமுக அரசு தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல: டாக்டர் அன்புமணி
நீலகிரி, கோவைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில்.. பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
புதியதோர் உலகம் செய்வோம்! (கவிதை)
திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!
Coffee with love.. இந்தோனேசியாவின் காபி காமு.. இதைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி தயார்..! நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்கிறார்!
தமிழ்நாடு நாள்.. தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... நம் தமிழ்நாடு!
{{comments.comment}}