Trump Card: 50 லட்சம் டாலர் கொடுத்தால் கோல்ட் கார்டு.. அதிரடி திட்டத்தை இறக்கிய டிரம்ப்!

Jun 12, 2025,05:56 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டினருக்கு 5 மில்லியன் டாலர் செலுத்தி பெறும் "கோல்ட் கார்டு" திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.


தனது சமூக ஊடகப் பக்கத்தில், "உலகின் மிகச்சிறந்த நாட்டிற்குள் நுழைவதற்கு ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.  இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு டிரம்ப் புகைப்படம், கையொப்பம் மற்றும் பெயருடன் கூடிய தங்க நிற கார்டு வழங்கப்படும். இந்தக் கார்டு பெறுவோருக்கு பின்னர் குடியுரிமையும் கிடைக்கும்.


கோல்ட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: முதலில் இதற்கான இணையதளத்திற்கு செல்லவும். இணையதளத்தில், பெயர், பிராந்தியம், நோக்கம், மின்னஞ்சல் முகவரி மற்றும் குடியிருப்பு விண்ணப்பம் தனி நபருக்கா, மனைவிக்கா அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கா என்பதை குறிப்பிட வேண்டும். ஐரோப்பா, ஆசியா (மத்திய கிழக்கு உட்பட), வட அமெரிக்கா, ஓசியானியா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய எட்டு பிராந்தியங்களை விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்க வேண்டும்.




விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை உள்ளிட வேண்டும். OTP எண்ணை உள்ளிட்டு சமர்ப்பித்தவுடன், "உங்கள் பயணம் தொடங்குகிறது. உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்" என்ற செய்தி திரையில் தோன்றும்.


விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்கு தற்போது எந்தவிதமான தகுதி நிபந்தனைகளும் குறிப்பிடப்படவில்லை. முன்னதாக, டிரம்ப் இந்த திட்டத்தை EB-5 முதலீட்டு விசா திட்டத்திற்கு மாற்றாக முன்மொழிந்தார். EB-5 திட்டத்தின் கீழ், அமெரிக்க வேலைவாய்ப்பு திட்டங்களில் $800,000 முதல் $1.05 மில்லியன் வரை முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு கிரீன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.


டிரம்ப் பிப்ரவரி மாதம் கூறுகையில், "பணக்காரர்கள் இந்த கார்டை வாங்குவதன் மூலம் நமது நாட்டிற்கு வருவார்கள். அவர்கள் செல்வந்தர்களாகவும், வெற்றிகரமானவர்களாகவும் இருப்பார்கள். மேலும் நிறைய பணம் செலவழித்து, அதிக வரி செலுத்தி, நிறைய பேருக்கு வேலை கொடுப்பார்கள். இது செல்வந்தர்களுக்கான குடியுரிமைக்கான வழி. திறமையானவர்களுக்கு பணம் செலுத்தி அவர்களை நாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று கூறியிருந்தார்.


அமெரிக்க குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது பெரும் பணக்காரர்களை மட்டுமே அமெரிக்காவுக்குள் ஈர்க்கும் டிரம்ப்பின் திட்டம்தான் இது. இதனால் பிறநாடுகளைச் சேர்ந்த சாமானியர்களுக்கு எந்த பலனும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

news

நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!

news

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்