ஆரோவில்லில் குடியரசுத் தலைவர்.. ஸ்ரீ அரவிந்தர் 150வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பு!

Aug 08, 2023,03:57 PM IST
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று ஆரோவில் சென்றார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ளார். இன்று அவர் ஆரோவில் சென்றார். அங்கு ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தார். அவருக்கு ஆசிரமம் குறித்து நிர்வாகிகள் விளக்கிக் கூறினர்.

பிந்னர் ஆரோவில் மாத்ரி மந்திர் மையத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற ஆன்மீகக் கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளில் துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக, ஆரோவில் சென்ற குடியரசுத் தலைவரை ஆரோவில் செயலர் திருமதி ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

நேற்று புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த புதிய ரேடியோகிராபி கருவி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அதேபோல திருக்காஞ்சி கோவில் கலை, கைவினைப் பொருள் கிராமத்திற்கும் சென்று சுற்றிப் பார்த்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

news

கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?

news

கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?

news

Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்