78 வது சுதந்திர தினம்.. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு‌.. நாட்டு மக்களுக்கு இன்று சிறப்பு உரை

Aug 14, 2024,12:06 PM IST

புதுடெல்லி:   78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு 7 மணிக்கு  மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.


நாடு முழுவதும் நாளை 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடபடவுள்ளது. அன்று செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்ற இருக்கிறார். இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதுடன் நாட்டின் பாரம்பரித்தை நினைவுக் கூறும் வகையில் விதத்தில் கலைக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஒத்திகை நிகழ்த்தி வருகின்றனர்‌.




இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்ற இருக்கிறார். அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷன் சேனல்களில் இரவு 7 மணிக்கு அவரது உரை ஒளிபரப்பு செய்யப்படும். இந்த ஒளிபரப்பு முதலில் இந்தியிலும், பின்பு ஆங்கிலத்திலும் மொழி பெயா்ப்பு செய்து ஒளிபரப்பாகும்.


இதனை தொடர்ந்து பிராந்திய தூா்தா்ஷன் சேனல்களில் இரவு 9.30 மணியளவில் அந்தந்த பிராந்திய மொழிகளில் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்