திருச்சி: சென்னையில் இருந்து திருச்சி வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் வந்து தற்போது ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார். அங்கு கம்பன் மண்டபத்தில் அவர் ராமாயண பாராயனத்தையும் கேட்கவுள்ளார்.
தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை கேலோ இந்திய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் இரவு சென்னையில் ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்தார். இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு, திருச்சி வந்து சேர்ந்தார்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் வந்த அவர் ரங்கநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். கோவிலுக்குள் பிரதமர் மற்றும் குறிப்பிட்ட சிலர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கோவில் வளாகத்தில் உள்ள கம்பன் கழகத்தில் ராமாயன பாராயனத்தையும் பிரதமர் மோடி கேட்கவுள்ளார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி ரங்கநாதர் கோவிலில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றியுள்ள பகுதி அனைத்தும் பிரதமரின் பாதுகாப்பு குழுவினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் செல்ல உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு குழுவினர் திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரமேஸ்வரம் வரும் பிரதமர், ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட உள்ளார். அதன் பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு. அங்குள்ள 22 தீர்த்த நீரை சேகரித்து அயோத்தியில் வருகின்ற 22ம் தேதி நடைபெறும் கும்பாவிஷேகத்திற்கு கொண்டு செல்ல உள்ளார்.
நாளை அவர் தனுஷ்கோடி மற்றும் கோதண்ட ராமர் கோயில் செல்கிறார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் டெல்லி செல்கிறார்.
பிரதமர் சுற்றுப்பயணம் செல்லும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதர் செல்லும் கோவில்களுக்கு நாளை மதியம் வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}