டெல்லி: வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்ற எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். இதனை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நாடாளுமன்ற எம்பியாக பிரியங்கா காந்தி சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே ராகுல் காந்தி மக்களவை எம்பி மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வரும் நிலையில் சகோதரி பிரியங்கா காந்தியும் எம்பியாக வலம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து ஒருவர் ஒரு தொகுதியில் மட்டும் தான் பதவி வகிக்க முடியும் என்ற அடிப்படையில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவித்தனர்.
அத்தொகுதி காலியானதை தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23ஆம் தேதி எண்ணப்பட்டன.இதில் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று, 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். ஏற்கனவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்று சாதனை படைத்தார் என்ற பெருமையை படைத்துள்ளார் பிரியங்கா காந்தி.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற எம்பியாக பதவி ஏற்றுக் கொண்டா் பிரியங்கா காந்தி. அரசியல் சாசன நூலின் பிரதியை கையில் உயர்த்திப் பிடித்தபடி பதவியேற்றுக் கொண்டார் பிரியங்கா காந்தி. கேரள பெண்கள் அணிவதைப் போல பாரம்பரிய சேலையை அவர் அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தலைவர்கள், காங்கிரஸ், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}