திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்ததாக தனியார் கல்லூரி பேராசிரியர் செபஸ்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தேடி வருகின்றனர்.
சமீப காலமாக வேலியே பயிரை மேய்வது போல, பாதுகாப்பு தர வேண்டிய ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதைகள் அதிகமாக நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதற்கு அரசு தண்டனைகளை கடுமையாக்கினால் தான் இது தொடர்பான சம்பவங்கள் குறையும் என்று பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரி மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார் ஒரு பேராசிரியர். அந்தக் கல்லூரியில் சம்பந்தப்பட்ட மாணவி, முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த மாணவியை கடந்த சில நாட்களுக்கு முன் அதே கல்லூரியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் இரவு மது அருந்த கூப்பிட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் செல்போனுக்கு கால் செய்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் தேவையற்ற வகையில் பேசியதோடு, இரவு நேரத்தில் மது குடிப்பதற்கும் அழைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த மாணவி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் அதே பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் கொடுத்த சிறிது நேரத்திலேயே புகாரை திரும்ப பெற்றனர். இது தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தால் எங்களது மகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், போலீசாரும், எழுதி வாங்கிக் கொண்டு அந்த பெண்ணின் பெற்றோர்களை அனுப்பி விட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி பரவிய நிலையில், அந்த இரண்டு ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் வலுத்தது. இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் அந்த 2 ஆசிரியர்களையும் டிஸ்மிஸ் செய்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன் மது அருந்த அழைத்த பேராசிரியரான செபாஸ்டின் என்பவரைக் கைது செய்தனர். மற்றொரு ஆசிரியர் தலைமறைவான நிலையில், அவரையும் தேடும் பணி நடந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}