திருநெல்வேலி: வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை கண்டித்து, அனைத்து ஜமாத் கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு சட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுடன் கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து திமுக, காங்கிரஸ், திர்ணாமுல், சமாஜ்வாதி உள்ளிட்ட மொத்தம் 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டு உச்ச நீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தது.

அதன்படி, நேற்று வக்பு சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனமோ சொத்துக்களின் நிலம் வகைப்படுத்துதலோ கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றன. அதில் நெல்லை மேலப்பாளையத்தில்
அனைத்து ஜமாத், அனைத்து அரசியல் கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ, கார், வேன், போன்ற வாகனங்களும் இயக்கவில்லை. இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
அதேபோல் வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் பதாகைகளை ஏந்தியபடி ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு முழக்கம் எழுப்பினர்.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}