புதுச்சேரி: புதுச்சேரியில் கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதால் புதுவையில் உள்ள நான்கு சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே தமிழகம் மற்றும் புதுவையில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. அதிகாலை ஏழு மணிக்கே சூரிய தரிசனம் கிடைத்து மாலை ஆறு மணி ஆனாலும் சூரியன் மறையாமல் வெப்ப கதிர்களால் நம்மை தாக்கி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் வேலைக்காக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஏனெனில் சாலைகளில் சற்றும் கூட நிழல் இல்லாமல் எங்கே ஒதுங்குவது என்ற எதிர்பார்ப்பில் தகித்து வருகின்றனர். குறிப்பாக சிக்னல்களில்தான் மக்கள் கடும் வெயிலில் வாடும் சூழல் உள்ளது. கண்டிப்பாக வெளியே சென்று கூலி வேலை பார்த்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கும் மக்கள் படும் அவதிதான் சொல்லி மாள முடியாதது. கடும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பலர் கடும் அவஸ்தையை சந்தித்தும், வெயிலால் பாதிப்படைந்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி அரசு வெயில் தாக்கத்தை சமாளிக்க புதிய யுத்தியை கையாண்டுள்ளது. அது என்ன தெரியுமா.. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அங்காங்கே போடும் சிக்னலில் நின்று தான் செல்ல வேண்டும். அது ஐந்து நிமிடமா இருந்தா என்ன.. பத்து நிமிடமாக இருந்தால் என்ன.. எவ்வளவு வெயில் அடித்தாலும் டிராபிக் ரூல்ஸை பாலோ பண்ண தான் வேண்டும். தற்போது கடும் வெயில் நிலவிவரும் நிலையில் என்ன செய்வது என்று அறியாமல் உச்சி வெயிலில் வாடி வதங்கி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.

இதற்காக புதுச்சேரி அரசிடம் போக்குவரத்து சிக்னல்களில் பசுமைப் பந்தல் அமைக்குமாறு பல்வேறு தரப்பினரிடையே கோரிக்கை எழுந்து வந்தது. இதனை அடுத்து புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் பொதுப்பணி துறையினரிடம் பசுமை பந்தல் அமைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள அஜந்தா சிக்னல், ஒதியன் சாலை சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், முருகா தியேட்டர் ராஜூ சிக்னல், ஆகிய நான்கு சிக்னல்களில் பசுமை பந்தல் அமைத்துள்ளது புதுச்சேரி அரசின் பொதுத்துறை. இதற்கு பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி சிக்னல்களில் தற்போது பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளதால் சிக்னலில் வாகன ஓட்டிகள் சற்றே இளைப்பாறி வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}