புதுச்சேரி: அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ல் நடைபெற உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு தீபாவளி பண்டிகை போல் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பொருட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என 8000த்திற்கும் அதிகமானோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களின் வருகையால் அயோத்தி முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுத்துறை வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் அரை நாள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக தினத்தில் மதுபான கடைகளை திறக்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியிலும் அன்றைய தினம் பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}