புதுச்சேரி: புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் அரசுப் பள்ளிகளில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிகளின் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தினசரி 7வகுப்பு நடைபெற்று வந்த நிலையில் இனி நடப்பு ஆண்டு முதல் 8 வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் கூடுதலாக பாடங்களை கற்கும் வகையில் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இனி அரசுப்பள்ளிகள் அரை மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.20க்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் மாற்றம். ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 9 மணி முதல் 9.15 அசெம்பிளி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் முதல் பாட வேளை காலை 9.15 மணி முதல் 10.00 மணி வரையும், இரண்டாவது பாட வேளை 10 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும். 10.45 முதல் 10.55மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்படுகிறது.
அடுத்ததாக காலை 10.55 முதல் 11.40 வரை மூன்றாவது பாடவேளையும், 11.40 முதல் 12.25 வரை நான்காவது பாட வேளையும் நடைபெறும். அதன்பின்னர் மதியம் உணவு இடைவேளையாக 12.25 முதல் 1.30 வரை ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.30 முதல் 2.10 மணி வரை ஐந்தாவது பாட வேளையும், 2.10 மணி முதல் 2.50 வரை 6வது பாடவேளையும் நடைபெறும். இதற்கு அடுத்ததாக 2.50 முதல் 3 மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழக்கப்படும். மதியம் 3 மணி முதல் 3.40 வரை 7வது பாட வேளையும், 3.40 முதல் 4.20 வரை 8வது பாட வேளையும் நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதே வேளையில் காலை நேரத்தில் ஒரு பாட நேரம் 45 நிமிடமாகவும், மதியத்துக்கு பிறகு 40 நிமிடமாகவும் பாடவேளை நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}