புதுச்சேரி: தமிழுக்காக போராடியவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. புதுச்சேரியில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க புதுச்சேரி அரசு வாக்குறுதி அளித்தபடி ஏதாவது குழு அமைக்கப்பட்டதா இல்லையா என்று கேட்டார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசினார். முதல்வர் ரங்கசாமி கூறுகையில், மிக மிக மதிக்க தலைவராக கலைஞர் இருக்கின்றார். தமிழுக்காக போராடியவர். தமிழக தலைவர்களையும் சார்ந்துதான் புதுச்சேரியில் நாம் இருக்கின்றோம்.

ஆனால் நீதிமன்றம் உத்தரவு உள்ளதால் புதுச்சேரியில் கலைஞர் சிலையை வைப்பதற்கு முடியாமல் உள்ளது. நிச்சயமாக கலைஞர் பெயரில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும். கலைஞர் கருணாநிதிக்கு எந்த அளவிற்கு மரியாதை செலுத்தப்படுமோ அந்த அளவிற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படும். என முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
புதுச்சேரி விமான நிலையப் பணிகள் குறித்த இன்னொரு கேள்விக்கு, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நிறைவடையாது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனது வைத்தால் விமான நிலையப் பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தார்.
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
{{comments.comment}}