உங்க குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்தாச்சா.. தமிழ்நாடு முழுவதும் 43,051 இடங்களில் சிறப்பு முகாம்!

Mar 03, 2024,11:05 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட தேர்தல் போல இது நடத்தப்படுகிறது.


போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாதம் நமது நாட்டில் ஒழிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் மீண்டும் இது வரக் கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. இதற்காக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் வருடா வருடம் நடத்தப்படுகின்றன.


அந்த வகையில்,  இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 43,051 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த மையங்களில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.




காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறும். சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளின் விரலில் அடையாள மை வைக்கப்படும். இதன் மூலம் யாருக்கெல்லாம் சொட்டு மருந்து தரப்படவில்லை என்பதை அடையாளம் கான இலகுவாக இருக்கும்.


மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தரப்படுகிறது.  கிட்டத்தட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்... நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி என்று அவர் தெரிவித்துள்ளார்.


உங்க குழந்தைக்கும் சொட்டு மருந்து கொடுத்தாச்சா.. மறவாமல் செய்வீர்.. அது உங்களது குழந்தையின் நலனுக்கானது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்