சண்டிகர்: பஞ்சாப் ஆளுநர் பதவியிலிருந்தும், சண்டிகர் நகர நிர்வாகி பொறுப்பிலிருந்தும் விலகுவதாக பன்வாரி லால் புரோஹித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பல்வேறு சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து, மாநில அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தவர் பன்வாரி லால் புரோஹித். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடுமையாக கண்டிக்கப்பட்டவர். இந்தநிலையில் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகர் நிர்வாகியாகவும் அவர் பதவி வகித்து வந்தார். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. பகவந்த் மான் தலைமையிலான அரசுக்கும், புரோஹித்துக்கும் இடையே நிறையப் பிரச்சினைகள் உள்ளன. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இழுத்தடிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் புரோஹித்துக்கு சரமாரியான கேள்விகளைக் கேட்டது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் கடுமையான கேள்விகளை எழுப்பியது. நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள் என்ற கடுமையான வார்த்தையையும் பெஞ்ச் பயன்படுத்தியது. அதேபோல நவம்பர் 23ம் தேதி நடந்த விசாரணையின்போது மீண்டும் ஆளுநருக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது உச்சநீதிமன்றம். தேவையில்லாமல் காலவரையின்றி சட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டசபையில் நிறுத்தப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில்தான் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சில காரியங்கள் காரணமாகவும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர் புரோஹித் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் ஆளுநராக இருப்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தவர் புரோஹித். இங்கும் சில சர்ச்சைகளில் அவர் சிக்கினார் என்பது நினைவிருக்கலாம்.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}