- கவிஞர் க.யாஸ்மின் சிராஜுதீன்
வணக்கம் நண்பர்களே
வாங்க ...! புரட்டாசி மாதத்தையொட்டி ஒரு ஸ்பெஷல் டிஷ் இன்று பார்க்கப் போகிறோம். அதுதாங்க, வெண்டைக்காய் சாம்பார். சுவையாகவும் எளிதாகவும் வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள்
1. வெண்டைக்காய்
2. துவரம் பருப்பு
3. வெங்காயம்
4. தக்காளி
5. புளி – சிறிய எலுமிச்சை அளவு
6.சாம்பார் பொடி
7. மஞ்சள் தூள்
8. உப்பு
9. எண்ணெய்
10. கடுகு
11. வெந்தயம்
12. கறிவேப்பிலை,
13 கொத்தமல்லி
செய்முறை

துவரம் பருப்பைக் கழுவி, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் , வெங்காயம் 1 ,தக்காளி 1 ,பூண்டு 4 பல் ,சீரகம் அரை டீஸ்பூன் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைக்கவும். பின்னர் வெண்டைக்காயைக் கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை ஒட்டும் தன்மை குறையும் வரை வதக்கவும். வெண்டைக்காயைத் தனியாக வதக்கினால் சாம்பார் பிசுபிசுப்பாக இருக்காது. அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் புளிக்கரைசல், சாம்பார் பொடி (இல்லையென்றால் தனி மிளகாய் பொடி), உப்பு சேர்த்து வேகவைத்த பருப்பை நன்றாக கடைந்து சேர்த்து கொதிக்க விடவும் பின்னர் வதக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து 5–10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
வெண்டைக்காய் சாம்பார் ரெடி
சூடாக பரிமாறவும்
அருமையாக இருக்கும்!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?
மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!
{{comments.comment}}