பொது சிவில் சட்ட மசோதா.. உத்தரகாண்ட் சட்டசபையில் நிறைவேற்றம்.. நாட்டிலேயே முதல் மாநிலம்!

Feb 07, 2024,06:54 PM IST

டேராடூன்:  இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.


"உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இந்த நாள் விசேஷமான தினமாகும். நீண்ட காலமாக அனைவரும் எதிர்நோக்கியிருந்த மசோதா (The Uniform Civil Code Uttarakhand 2024 Bill) இது. இந்த மசோதா இன்று சட்டசபையில் விவாதத்திற்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி.


இந்தியாவிலேயே பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில்தான். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் இந்த சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ராஜஸ்தான் மாநில அரசு அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் இதை கொண்டு வரப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. 


பொது சிவில் சட்டம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் என்று பொருள்படும். அதாவது திருமணம், விவாகரத்து, சொத்துப் பிரிப்பு, தத்தெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில், மத அடிப்படையில் எந்தவிதமான பாரபட்சமும்  இல்லாமல் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத் தீர்வுக்கு இது வழி வகுக்கும். தற்போது இஸ்லாமியர்களுக்கு தனி சட்ட நடைமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்பதால் பொது சிவில் சட்டத்திற்கு இல்ஸாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உத்தரகாண்ட் சபையில் இந்த சட்ட மசோதா மீதான விவாதம் 3 நாட்களுக்கு நடைபெற்றது. இன்று மாலை மசோதா நிறைவேற்றப்பட்டது. 


அதன் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் தமி பேசுகையில், இது முக்கியமான தினம். நாங்கள் இன்று நிறைவேற்றியுள்ள சட்டத்தைத்தான் ஒட்டு மொத்த தேசமும் எதிர்நோக்கியுள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் சட்டசபையில் அதை நிறைவேற்றியுள்ளோம். இதற்காக பாடுபட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இதற்கு எங்களுக்கு வழிகாட்டியாக திகழும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த சட்ட மசோதா யாருக்கும் எதிரானதல்ல. ஆனால் அனைவருக்கும் இது நலம் பயக்கும், குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கு இது நல்லது செய்யும். அனைவருக்கும் சம வாய்ப்புகளை, உரிமைகளை இது அளிக்கும். பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை அகற்ற இது உதவும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்