மகசார், இந்தோனேசியா: இந்தோனேசியாவில் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண், பெரிய மலைப் பாம்பின் வயிற்றுக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல பாம்பால் விழுங்கப்பட்டு மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் இந்தோனேசியாவில் சகஜமானதுதான். ஆனால் இந்தப் பெண் விவகாரத்தில், அந்தப் பெண்ணின் உடல் கொஞ்சம் கூட பாதிக்கப்படாமல், போட்டிருந்த டிரஸ் கூட சேதமடையாமல் அப்படியே படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பது போல இருந்ததுதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் பரீடா. 45 வயதான இவர், தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள கலெம்பாங்க் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். வியாழக்கிழமை இரவு இவர் காணாமல் போனார். இவரை கணவர் மற்றும் குடும்பத்தார் தேடி வந்தனர். இந்த நிலையில் இவர் பயன்படுத்திய சில பொருட்கள் அந்தப் பகுதியில் கிடந்துள்ளன. இதைப் பார்த்த கணவருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து கிராமத்தினரும் இணைந்து தீவிரமாக அந்தப் பகுதியை சல்லடை போட்டுத் தேடியபோது 16 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு வயிறு வீங்கிய நிலையில் படுத்துக் கிடந்ததைப் பார்த்தனர்.
அந்தப் பாம்புதான் தனது மனைவியை விழுங்கியிருக்கும் என்று சந்தேகப்பட்டார் கணவர். கிராமத்தினருக்கும் அதே சந்தேகம் வர அந்த பாம்பின் வயிற்றை கிழித்துப் பார்க்க முடிவு செய்து பாம்பை முதலில் கொன்றனர். பின்னர் பாம்பின் வயிற்றைக் கிழித்தபோது முதலில் அந்தப் பெண்ணின் தலை வெளியே வந்தது. இதைப் பார்த்து கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பாம்பின் வயிற்றை முழுமையாக கிழித்தபோது அந்தப் பெண் உடை கூட சிதையாமல் அப்படியே பிணமாக இருந்தார். இதையடுத்து உடலை வெளியே எடுத்தனர்
கடந்த ஆண்டும் இதேபோலத்தான் இதே மாகாணத்தில் டினனகியா கிராமத்தில், ஒரு விவசாயியை பெரிய பாம்பு விழுங்கி விட்டது. இதையடுத்து ஊரே கூடி அந்த பாம்பை அடித்துக் கொன்று விவசாயி உடலை வெளியே எடுத்தனர். இந்தோனேசியாவில் இதுபோல மலைப் பாம்புகள் மனிதர்களை விழுங்கிக் கொள்வது மிக மிக சாதாரணமாக நடந்து வருகிறது.
ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து.. சென்னையில் நாளை பேரணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் - பிசிசிஐ
திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
No Live coverage: மீடியாக்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. அடக்கி வாசிங்க.. மத்திய அரசு கோரிக்கை
பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?
அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!
மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சண்டிகரில் எச்சரிக்கை சைரன்!
மதுரையில் கம்பீரமாக வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம்..உணர்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்
கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.. ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்!