புதுடில்லி: வங்க கவிஞர் ரவீந்திநாத் தாகூர் தன் கையால் ஆங்கிலத்தில் எழுதிய நம் தேசிய கீதமான ஜன..கண..மன..பாடலின் பிரதி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் நாட்டுப்பண் பாடலை வாங்காள மொழியில் எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர். இவர் 1861ம் ஆண்டு மே 7ம் தேதி கல்கத்தாவில் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் .இவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஒரு கல்வியாளரும் ஆவார். ஆசியாவிலேயே முதல் நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர். இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜால், வீரத்திருமகன் என்ற பட்டம் இவர் பெற்றுள்ளார்.
இவரது பிரபலமான இசைகள் அனைத்தும் ரவீந்திரசங்கீத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களில் ஒன்றான 'ஜன கண மன' இந்தியாவின் நாட்டுப்பண் ஆகவும், 'அமர் சோனார்' வங்காளத்தின் தேசிய கீதமாகவும் உள்ளது. ஜன கண மன என்ற நாட்டுப்பண் பாடல் 52 விநாடிகளில் இன்றளவு பாடி முடிக்கப்பட்டு வருகிறது. 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு நடக்கும் போது இப்பாடல் பாடப்பட்டது.
1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி ஜன கண மன இந்தியாவின் தேசிய கீதமாகவும், வந்தேமாதரம் தேசியப்பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் அனைத்து இந்திய வானொலியின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிக்கப்பட்டது. இந்தியாவில் நடக்கும் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்றுவது வழக்கம். இப்பாடல் பாடப்பெறும் போது அனைவரும் எழுந்து அசையாமல் நின்று மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க பாடலை ரவீந்திரநாத் தாகூர் தன் கையால் எழுதிய ஜன..கண..மன.. ஆங்கில கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வங்க மொழியில் இருந்து தி மார்னிங் சாங் ஆப் இந்தியா என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இப்பாடலை ரவீந்திரநாத் தாகூர் தன் கையால் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த கடிதம் நோபல் பரிசு அமைப்பின் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}