காதலுக்கு வயதில்லை.. A real Love story!

Feb 24, 2026,02:18 PM IST

- மு. ராதிகா தேவி


டிசம்பர் 31. பெங்களூரில்  மகன் வீட்டில் புத்தாண்டை கொண்டாட வந்திருந்த எனக்கு என்னுடைய தங்கையிடம் இருந்து ஒரு போன். எங்கள் அம்மாவிற்கு திடீர் என்று வயிறு வலி என்றும் டாக்டர் உடனே ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டார் என்றும் சொல்கிறாள். உடனே கிளம்பி ஊருக்கு திரும்பினோம். 


எங்கள் அம்மா (76 வயது) அப்பாவுக்கு (வயது 81) நாங்கள் மூன்று மகள்கள். நான் தான் மூத்தவள். மூன்று பேருமே சிவகாசி. ஒரு தங்கை அப்பாவுடன் இருந்து அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும், மற்ற இருவரும் அம்மாவுடன் morning shift , night shift என்று பிரித்து கொள்வோம் என்று முடிவு செய்தோம். 


எதிர்பாராத விதமாக ஒரு தங்கைக்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டு விட மருத்துவமனையில் எனக்கே 24 மணி நேரமும் டூட்டி.  ஏழு நாட்கள் என்பதால் அங்கிருந்த நர்ஸ்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல ஆகி விட்டார்கள். நான் அக்கா, என் அம்மா பாட்டி, என் அப்பா தாத்தா. எனது அம்மாவை அப்பா தினமும் இரண்டு முறை டிரைவர் துணையோடு வந்து பார்த்து விட்டு செல்வார். 




கஷ்டப்பட்டு என் அப்பா வருவதை உரிமையுடன் கேலி செய்து கொண்டே இருப்பார்கள். 'எங்கள் கணவர்களை உங்களிடம் டியூஷன் படிக்க வர சொல்கிறோம் தாத்தா. எப்படி மனைவியை அன்பாக பார்த்துக் கொள்வது என்று சொல்லிக் கொடுங்கள்.' என்று கூறுவார்கள். என் அம்மாவோ 'தாத்தாவுக்கு வயசான அப்புறம் தான் ரொம்ப பாசம் வந்துருச்சு. முன்னாடி எல்லாம் இப்படி கிடையாது' என்பார். குடுத்து வச்ச பாட்டி என்று பெருமூச்சு விடுவார்கள். 


ஒரு நாள் நான் கீழே உள்ள மருந்து கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்தேன். வேகமாக ஓடி வந்தாள் உமா என்கிற நர்ஸ். 'அக்கா அக்கா ஒரு ரொமான்டிக் சீன் மிஸ் பண்ணி விட்டீர்கள் அக்கா. இன்னைக்கு தான் தாத்தா பாட்டிக்கு Valentines day ' என்று சிரித்தாள். புரியாமல் எட்டி பார்த்தால் எங்கள் அம்மா கையில் ஒரு சிகப்பு ரோஜா. என் அப்பா என்னை பார்த்த உடன் 'இது நம்ம வீட்டு ரோஜா செடியில் பூத்த முதல் பூ டா. அது ஒரு வாரமா மொட்டாக இருந்துச்சு. அம்மா பார்த்துட்டே இருந்தாள் . இன்னைக்கு தான் மலர்ந்துச்சு. அது தான் பறிச்சு கொண்டு வந்தேன். அதுக்கு என்னை கேலி பன்றாங்க டா.' என்கிறார். 


அதற்கு நர்ஸ் பெண் ' தாத்தா பறிச்சு கொண்டு வந்தீங்களா? பரிசு கொண்டு வந்தீங்களா? திருப்பி ரிப்பீட் பண்ணுங்க தாத்தா. வீடியோ எடுக்கணும். அக்கா வேற மிஸ் பண்ணிட்டாங்க. வீடியோ ஷேர் பண்ணா VIRAL ஆகி விடும்' என்றாள். என் அம்மாவை பார்த்தேன். முகத்தில் MELLIYA வெட்கம். அது ஒரு அழகான கவிதை. மறக்க முடியாத தருணம். 


மூன்றாவது செக் அப் பெப்ரவரி மாதம். என்னைப்  பார்த்தவுடன் அந்த நர்ஸ் 'அக்கா தாத்தாவோட Valentines day பிளான் என்ன' என்று கேட்டு விட்டு காதலுக்கு வயதில்லை அக்கா, என்றாள்.  உண்மையான வார்த்தைகள். ஆம் காதலுக்கு வயதில்லை. நீங்களும் ஒத்து கொள்கிறீர்கள் தானே? 


(மு. ராதிகா தேவி, சிவகாசி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்