பாட்னா: பீகார் மாநிலம், அர்ராவில் நடந்த பேரணியின்போது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கருப்பு கொடி காட்டிய பாஜக இளைஞர் அணி தொண்டர்களுக்கு மிட்டாய் கொடுத்து அதிர வைத்தார் ராகுல் காந்தி.
ரேபரேலி எம்பியான ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டார். அப்போது, தர்பங்காவில் நடந்த பேரணியின்போது பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை சிலர் மோசமாக பேசிய வீடியோ வைரலானது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக மட்டுமல்லாமல், அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் ஓவைசியும் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அர்ராவில் நடந்த பேரணியின்போது பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் வழியில் ராகுல் காந்திக்குக் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கருப்பு கொடி காட்டிய தொண்டர்களை அருகே வருமாறு கூறிய ராகுல் காந்தி இனிப்பு மிட்டாய்களை கொடுத்தார்.

இதற்கிடையே, தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட ஒரு பதிவில், உண்மை மற்றும் அகிம்சை வெல்லும், பொய் மற்றும் வன்முறை நிலைக்காது. நீங்கள் எவ்வளவு அடிக்கவும் உடைக்கவும் விரும்பினாலும் அடியுங்கள், உடைத்து எறியுங்கள் - நாங்கள் தொடர்ந்து உண்மையையும் அரசியலமைப்பையும் பாதுகாப்போம். உண்மையே வெல்லும்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்பு மீதான தாக்குதல். பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை நாட்டில் வாக்கு திருட்டில் ஈடுபடுகின்றன.
பீகாரில் இருந்து தொடங்கிய வாக்காளர் உரிமை யாத்திரை மக்களின் வாக்குகளை திருடுவதற்கு எதிரான நாடு தழுவிய இயக்கமாக மாறும். மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வாக்குகளை திருடியது. ஆனால் பீகாரில் ஒரு வாக்கு கூட திருட பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}