பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகும் மத்திய அரசு திருந்தவில்லை.. ராகுல் காந்தி கண்டனம்

Oct 12, 2024,05:26 PM IST

திருவள்ளூர்:   கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்த பாக்மதி  பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. சில பெட்டிகள் தடம் புரண்டன.இருப்பினும் இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.


விபத்து நடந்த இடத்தில் தற்போது வரை 12 நேரமாக மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கனரக வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தடம் புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டு வருகிறது. மறுபுறம் விபத்து எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாகவும் பெங்களூரில் இருந்து வந்த உயர்மட்ட குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 




இதற்கிடையே தெற்கு ரயில்வே மேலாளர் ஆர் என் சிங்  விபத்துக்கான காரணம் குறித்து, பாகமதி பயணிகள் ரயில் மெயின் லைனில்  நிற்காமல் சென்றிருக்க வேண்டும்.அது மட்டுமல்லாமல் மெயின் லைனில் க்ரீன் சிக்னல் போடப்பட்டிருந்தும் லூப் லைனில் பயணிகள் ரயில் சென்றால் நின்றிருந்த சரக்கு ரயில் பின்புறம் மோதி விபத்திற்கு உள்ளானது  என  தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் கவரப்பேட்டை விபத்து குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:


ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்து  போலவே கவரப்பேட்டையிலும் ரயில் விபத்து நடந்துள்ளது. ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சகம் பொறுப்பேற்க வேண்டும். ஏராளமான ரயில் விபத்துக்கள் நடந்து பல உயிர்கள் பறிபோன போதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.


11 பெட்டிகளில் 8 அகற்றம்


இதற்கிடையே, கவரப்பேட்டை ரயில் விபத்தில் மொத்தம் 11 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. 11 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் எட்டு பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


சென்னை கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளதால் பகுதிகளில் சீரமைப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்