டெல்லி: மோடி மீடியா வெளியிட்ட போல் இது, இதை எக்சிட் போல் என்று சொல்லாதீர்கள். நாங்கள் 295 இடங்களில் வெல்வோம் என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தொடர்பான எக்சிட் போல் முடிவுகள் நேற்று வெளியாகின. பல்வேறு ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட இந்த கருத்துக் கணிப்புகளில் மீண்டும் பாஜகவே வெல்லும், ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நிராகரித்துள்ளன. இது பாஜகவே ரெடி செய்த கருத்துக் கணிப்பு முடிவு. இது மக்களை திசை திருப்பும் எக்சிட் போல் முடிவு என்றும் அவை கூறியுள்ளன.
இந்த நிலையில் இன்று டெல்லியில் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டனர். அதற்கு அவர், இது எக்ஸிட் போல் அல்ல. இது மோடி மீடியா போல். இது அவர்களுக்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு என்று கூறிவிட்டுச் சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்த அவர், நீங்கள் சித்து மூசேவின் பாடல் 295 கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு மீண்டும் அழுத்தம் திருத்தமாக 295 என்று, அதாவது இந்தியா கூட்டணி வெல்லப் போகும் சீட்டுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு விட்டு ராகுல் காந்தி சென்றார்.
நேற்று வெளியான பல்வேறு எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளில் பாஜகவிற்கு அதிக அளவிலான இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்துக் கணிப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளன. 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்புகள் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}