பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் திட்டமிடப்பட்டு வந்த முதலமைச்சர் பதவி மாற்றம் தற்பொழுது இறுதிப் புள்ளியை எட்டியுள்ளது. முதலமைச்சராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளார். இந்த அதிகார மாற்றத்தை ராகுல் காந்தி முன்னின்று வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில் 2029 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு பல்வேறு காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார் ராகுல் காந்தி. அதன் ஒரு பகுதிதான் கர்நாடகாவில் நடைபெறவுள்ள இந்த ஆட்சி மாற்றம்.
டெல்லியில் சித்தராமையாவுடன் ராகுல் காந்தி நடத்திய சுமார் 35 நிமிடத் தனிப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, சித்தராமையாவை ராஜினாமா செய்ய அவர் சம்மதிக்க வைத்துள்ளார். காங்கிரஸின் மிக முக்கிய ஓபிசி (OBC) முகங்களில் ஒருவரான சித்தராமையா, மாநில அரசியலைத் தாண்டி தேசிய அளவிலான அரசியலை உற்று நோக்க வேண்டும் என்றும், குறிப்பாக 2029 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் சித்தராமையா, தனது தலைமையின் கீழ் ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே அடுத்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றும், டி.கே.சிவக்குமார் 2028-ல் புதிய அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளலாம் என்றும் வாதிட்டார். இருப்பினும், ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஏற்கனவே கேரள முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் நிலவிய முட்டுக்கட்டையை காங்கிரஸ் எவ்வாறு சாதுரியமாகக் கையாண்டதோ, அதே போன்றதொரு அரசியல் முதிர்ச்சியை இங்கும் ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த நான்கு தசாப்தங்களாக கர்நாடகாவில் எந்தவொரு ஆளுங்கட்சியும் அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததில்லை. 2013 முதல் 2018 வரை முழுமையாக ஆட்சி செய்த போதிலும், அதற்கு அடுத்த தேர்தலில் சித்தராமையாவால் காங்கிரஸிற்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தர முடியவில்லை. எனவே, இந்த வரலாற்றை மாற்றி, வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்யவே இந்த புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ராகுல் விருப்பபடியே ஆட்சியமைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியை வலுவான, செல்வாக்காக திகவும் விஜய்யுடன் கை கோர்க்க வைத்துள்ளார் ராகுல் காந்தி. கர்நாடகத்திலும் தனது திட்டப்படி ஆட்சி மாற்றத்தை அரங்கேற்றியுள்ளார். காங்கிரஸ் வகுத்து வரும் திட்டங்களை பாஜகவும் உற்று நோக்கி வருகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}