சென்னை: இந்திய ரயில்வே 6,180 டெக்னீஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 6,180 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 28ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் 6,180. இந்த பணியிடங்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டெக்னீஷியன் கிரேடு 1ல் 180 பணியிடங்களும், டெக்னீஷியன் கிரேடு 3ல் 6,000 பணியிடங்களுமாக பிரிக்கப்பட்டுள்ளன.
முதல் பிரிவிற்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். 2வது பிரிவிற்கான கல்வித்தகுதி ஐடிஐ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

1. கணினி அடிப்படையிலான தேர்வு
2. ஆவண சரிபார்ப்பு
3. மருத்துவ பரிசோதனை
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் (EBC) போன்ற பிரிவினருக்கு ரூ.250 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை எழுதிய பிறகு, முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். கணினி அடிப்படையிலான தேர்வை எழுதிய பிறகு, ரூ.400 திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 28,2025 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் ஆர்ஆர்பியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}