இயற்கையின் வரப்பிரசாதம் மழை.. நினைவுகளின் அழகிய சாரல்!

Nov 29, 2025,04:11 PM IST

- அ.கோகிலா தேவி


சென்னை: இயற்கையின் ஒரு அற்புதம் மழை! 


மழை என்று சொல்லும் போதே மனதிற்குள் எழும் ஒரு புது உற்சாகம், குதூகலம், ஆனந்தம் மற்றும் ஒரு பயம். மழை வெறும் நீர் துளி அல்ல பல நினைவுகளை நம்முன் கொண்டு வந்து இனிய சிலிர்ப்பை தர கூடியது.


கோடை வெயிலின் கதகதப்பில் வெந்து கொண்டிருக்கும் பூமி மீது  முதல் மழைத்துளி விழும் போது எழும் அந்த மண் வாசனைக்கு நான் அடிமை.


மழை என்றாலே பள்ளி விடுமுறையை எதிர்பார்க்கும் மனம். அம்மா செய்து தரும் சூடான பஜ்ஜி, ஜன்னலோர சில் என்ற காற்று, மெய்சிலிர்க்கும் குளிர் .. நினைக்க நினைக்க ஆனந்தமே.




கனமழை பெய்து இடி மின்னலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பத்துடன் சிரித்து பேசி, உண்டு மகிழ்ந்த நாட்கள் கண் முன்னே வருகின்றன.


ஒவ்வொரு மழைத்துளியும் ஒரு கதை சொல்கிறது. புதுபுது அனுபவங்களை நாம் என்றும் கொண்டாடுவோம்.


இன்று மழை என்றாலே பயம் என்றாகி விட்டது. வெள்ளம் வருமோ, வீடுகளில் புகுந்து விடுமோ.. என்ன செய்வது ஏது செய்வது என்ற அச்ச உணர்வுடன்தான் மழையை இன்று பலரும் பார்க்கிறார்கள். மழை வந்தால் ஜாலியாக ஆடிப் பாடி மகிழ்ந்த காலம் போய், இந்த மழையை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற அச்ச உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. காரணம், மழைக்கான இடத்தை நாம் ஆக்கிரமித்து வைத்திருப்பதால்.


மழைக்கும் இடம் தருவோம்.. மழையோடு நம் வாழ்க்கையையும் ஒருங்கிணைப்போம்.. ஆனந்தத்துடன் அதை வரவேற்போம்.. மழை நல்லது.. மண்ணுக்கு மட்டுமல்ல.. மனதுக்கும்.


(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்