சென்னை: மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில், கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இப்பகுதிகளில் பகலில் வெயில் அதிகமாக காணப்பட்டாலும் மாலை நேரங்களில் நல்ல மழை பொழிந்து முழுமையான சூழல் நிலவு வருகிறது.

அந்த வகையில் நேற்று இரவுக்கு மேல் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த தொடர் மழை காரணமாக சென்னை புழல் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இது தவிர சென்னையில் உள்ள குடிநீர் ஏரிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது மழை பெரிதாக இல்லாவிட்டாலும் கூட மேக மூட்டமாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மழை முட்டிக் கொண்டு வரும்போல உள்ளது.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும். குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மழை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பொன்னேரியில் சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்குன்றம், ஆவடி, ராணிப்பேட்டை, புழலில் தலா 7 செமீ மழையும்,சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 5 சென்டிமீட்டர் மழையும், பூண்டி ஊத்துக்கொட்டையில் தலா 3 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் பூவிருந்தவல்லி, திருவள்ளூர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டியில் தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
{{comments.comment}}