சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்:
கடந்த சில நாட்களாகவே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலேயே பரவலாக கனமழை பெய்து வந்தது. தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
அதேபோல் நாளை வட கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
இதற்கிடையே, எதிர் வரும் வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியில் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே சென்னை முழுவதும் உள்ள நீர் நிலைகளையும் தூர்வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தற்போது முதற்கட்டமாக பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியில் கனரக இயந்திரம் கொண்டு சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மாநகராட்சி பகுதிகள் அனைத்திலும் இந்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}