மீண்டும் வரும் மழை நாட்கள்.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு.. ஜில் ஜில் கூல் கூல் தான்!

Jul 25, 2024,10:22 PM IST

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. மற்ற மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்து வறண்ட வானிலையே நிலவி வந்தது. இதனால் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.




இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஒரு வாரத்திற்கு மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, 


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அப்போது 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல் சென்னைக்கு இரண்டு நாட்கள் மிதமான மழை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.


இதுதவிர இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, ராய்காட், தானே, ரத்தினகிரி, பால்கர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும்,கர்நாடக மாநிலத்தில் குடகு உட்பட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கேரளாவில் வயநாடு உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

அதிகம் பார்க்கும் செய்திகள்