Rain: தமிழ்நாட்டில்.. ஜூன் 2ஆம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!

May 29, 2024,06:16 PM IST

சென்னை:  கேரளாவில் தென்மேற்குப் பருவமழை இரண்டு, மூன்று தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் இரண்டாம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கேரளாவில் இன்றும் நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல், நிக்கோபார் தீவுகளில் கடந்த 19ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதற்கிடையே தென் தமிழ்நாட்டின் மேல் பகுதிகளில் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 




 கடந்த இரண்டு நாட்களாகவே கேரளாவின் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.குறிப்பாக கேரளாவில் இன்றும் நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை  இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களில் தொடங்க கூடும்.


தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் ஜூன் ஒன்றாம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜூன் இரண்டாம் தேதியும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். 


அதேநேரத்தில் கர்நாடகாவிலும் ஜூன் இரண்டாம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வெயில் நிலவரம்:


 தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கும் முன்னே வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். அதன் பின்னர் கோடை மழை பெய்து வெப்பம் தணிந்து  குளுமை நிலவியது.இதனால் மக்கள் குஷியில் இருந்து வந்தனர். ஆனால் தற்போது  கத்திரி வெயில் இறுதி கட்டத்தில் மீண்டும் வெயில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வெயில்  சுட்டெரித்தது.


கத்திரி வெயிலின் இறுதி நாளான நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருத்தணி,வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை, நாகை, தஞ்சை, உள்ளிட்ட 11 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.


நாட்டிலேயே நேற்றைய தினம் ராஜஸ்தானில் அதிகபட்சமாக வெப்பநிலை 123 டிகிரி வெயில் கொளுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்