சென்னை: மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
அதேபோல் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் தொடர் மழை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நான்காவது நாளாக இன்றும் கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 21.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதேப்போல் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 11.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான நீலகிரி கோவை, திண்டுக்கல் திருப்பூர் தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம். அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதால் இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கும், கேரளாவில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}