சென்னையை உலுக்கிய Michaung புயல்.. ஆந்திராவில் கரையைக் கடந்தது.. சென்னைக்கு மழை இருக்கு!

Dec 05, 2023,05:48 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை : சென்னையை உலுக்கி விட்டு ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்த மிச்சாங் புயல் அங்கு பாபட்லா பகுதியில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 900 முதல் 11 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசியது.


இதற்கிடையே, தமிழகத்தில் நாளை முதல் டிசம்பர் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால்  பகுதிகளில் நாளை முதல் 3 நாட்கள் மிதமான மழை பெய்யும்  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் உருவான மிச்சாங் புயல் நேற்று தீவிரப் புயலாக வலுப்பெற்று சென்னையை உலுக்கி எடுத்தது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளைக்காடானது .கடந்த இரண்டு நாட்களாக சென்னை முழுவதும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு சென்னை மக்கள் அவதிக்குள்ளாகினர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடிய தொடங்கிய நிலையில், வெள்ளத்திலிருந்து மீண்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் பல பகுதிகளில் மின்சாரம், மொபைல் டவர், இன்டர்நெட் சேவை சீராகவில்லை.  பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.




இந்நிலையில் இன்று காலையில் மிச்சாங் புயல் 200 கிமீ தொலைவில் ஆந்திராவின் வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது. தற்போது இந்தப் புயல்  ஆந்திராவின் காவாலியை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த புயல் தற்போது ஆந்திர மாநிலம் பாப்பட்லாவுக்கு அருகே தெற்கு ஆந்திரா கடற்கரைப் பகுதியில் தற்போது கரையைக் கடந்து விட்டது. 


ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே மிச்சாங் புயல் கரையை கடந்தது. புயல் கரையைக் கடப்பதால், அருகாமையில் உள்ள திருவள்ளூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழையையும் , சென்னையில் இரண்டு நாட்கள் மிதமான மழையும் எதிர்பார்க்கலாம். என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி, தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் டிசம்பர் 9ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 


ஏற்கனவே பெய்த மழைக்கே மொத்த சென்னை நகரமும் வெள்ளத்தில் மிதக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. புயல் கடந்து சென்று விட்டதால் இனி மழை இருக்காது என நிம்மதி அடைந்த சென்னை மக்களை பீதி அடைய வைக்கும் னிதமாக இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்