சென்னை: சென்னை நகரிலும், புறநகர்களிலும் விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை பெரிய அளில் இதுவரை பெய்யவில்லை. மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் இதுவரை வழக்கமான மழைப் பொழிவு இல்லை. பற்றாக்குறையில்தான் இந்த சீசன் ஆரம்பித்துப் போய்க் கொண்டிருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழை வச்சு செய்யும். வெள்ளப் பெருக்கு ஏற்படும். நகரின் பல பகுதிகள் மிதக்கும். ஆனால் இதுவரை சென்னையில் இதுவரை ஒரு Spell கூட உருப்படியாக இல்லை. திடீர் திடீரென சாரல் மழை போல வருகிறது.. போய் விடுகிறது. அதுவும் மொத்த நகரிலும் மழை பெய்வதில்லை. மாறாக தேனாம்பேட்டையில் பெய்யும்.. குரோம்பேட்டையில் வெயில் அடிக்கும்.. மாம்பலத்தில் பெய்யும் .. மயிலாப்பூரில் வெயில் வெளுக்கும்.. இப்படித்தான் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இன்றும் கூட காலை முதல் ஆங்காங்கே குட்டி குட்டியாக மழை வந்து வந்து போகிறது. என்ன இது விளையாட்டு என்று வடிவேலு பாணியில் மழையைப் பார்த்து மக்கள் கேலியாக கேட்கும் அளவுக்குத்தான் இந்த மழை இருக்கிறது.
தீபாவளிக்கு சூப்பர் மழைக்கு வாய்ப்பு
இதற்கிடையே, தீபாவளிப் பண்டிகை சமயத்தில் தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 4ம் தேதி 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். 5ம்தேதி 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}