- மஞ்சுளா தேவி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்துக்கு வேட்டையன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான டைட்டில் டீசரை லைக்கா நிறுவனம் இன்று மாலை வெளியிட்டது.
கடந்த வருடம் ஜெயிலர் படம் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் பல கோடிகளை அள்ளியது. இதனை தொடர்ந்து ஜெய் பீம் பட இயக்குனர் த.செ. ஞானவேல் "தலைவர் 170" வது படத்தை இயக்குகிறார். இப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினிகாந்த்துடன் அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கிறார். இவர்கள் தவிர ராணா, ரித்திகா சிங், துஷரா விஜயன், பகத் பாசில், மஞ்சு வாரியர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருவதால் அமிதாப்பச்சன் உடன் இணைந்த புகைப்படம் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படம் பொங்கல் அன்று வெளிவர உள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து கோடை விடுமுறையான ஏப்ரல் மாதத்தில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170 ஆவது படம் வெளிவர உள்ளது. இப்படத்தின் தலைப்பு குறித்து இதுவரை தகவல்கள் வெளிவராமல் இருந்தது.
தொடர்ந்து ரஜினியின் படங்கள் வெளிவர உள்ள நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை படத்தின் டைட்டிலை அட்டகாசமான டீசருடன் இணைத்து வெளியிட்டது லைக்கா நிறுவனம். இப்படத்திற்கு வேட்டையன் என்று பெயரிட்டுள்ளனர். சந்திரமுகி படத்தில் வந்த கேரக்டர்தான் வேட்டையன். சூப்பர் ஹிட்டான அந்தப் பெயரையே இப்போது ரஜினியின் 170வது படத்துக்கு வைத்துள்ளனர்.
படத்தின் டீசரில் ரஜினிகாந்த் தனது வழக்கமான ஸ்டைலில் தெறிக்க விட்டுள்ளார். அதிலும், குறி வச்சா இரை விழணும் என்று அவர் பேசியுள்ள வசனம் இனி ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமாக சில காலம் பட்டையைக் கிளப்பும் என்று நம்பலாம்.. டீசரை படு வேகமாக கொண்டாடிக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.
ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி இந்த டைட்டிலை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது லைக்கா நிறுவனம்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}