சென்னை: சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எனது மகள் ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். இப்படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவின்போது பேசிய ரஜினிகாந்த், நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். விஜய் நான் பார்க்க வளர்ந்த பிள்ளை. அவருக்கு நானோ அல்லது எனக்கு அவரோ போட்டியோ கிடையாது. நான் கூறிய காக்கா கழுகு கதையை தவறாகப் புரிந்து கொண்டு விட்டனர் . ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்போது, எனது அப்பாவை சங்கி என்று கூறும்போது எனக்கு கோபமாக வரும். அவர் சங்கி அல்ல. சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் அவர் அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார் என்று கூறியிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு இன்று நடிகர் ரஜினிகாந்த்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று ஐஸ்வர்யா எங்கேயும் கூறவில்லை. அப்பா ஆன்மீகவாதி, எல்லா மதங்களையும் விரும்புபவர். அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதுதான் அவரது பார்வை என்றார் ரஜினிகாந்த்.
பட புரமோஷனுக்காக இப்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசினாரா என்ற கேள்விக்கு, இல்லை.. அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்தார் ரஜினிகாந்த்.
லால் சலாம் படம் எப்படி வந்திருக்கு என்று கேள்விக்கு, சூப்பரா இருக்கு. நல்லா வந்திருக்கு. நீங்க பாருங்க. மத நல்லிணக்கம் குறித்து இதில் சொல்லிருக்காங்க என்றார் ரஜினிகாந்த்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}