அது யாரு?.. அட.. நம்ம "சூப்பர் ஸ்டாரு".. பரபரப்பாகிப் போன புதுச்சேரி பழைய துறைமுகம்!

Jan 12, 2024,09:58 AM IST
புதுச்சேரி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு விறுவிறுப்பாகி வருகிறது.  புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் நடந்த ஷூட்டிங்கின்போது, ரஜினிகாந்த்தைக் காண பெரும் திரளாக ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

ஜெயிலர் என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த ரஜினிகாந்த் அதன் பிறகு இரு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் லால் சலாம். இதை அவரது மகள் ஐஸ்வர்யார ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இதில் கேமியோ ரோல்தான் செய்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவும் இணைந்து நடித்துள்ளார்.

அனைவரும் எதிர்பார்க்கும் இன்னொரு படம் வேட்டையன். இது ரஜினிகாந்த்தின் 170வது படமாகும். இதை த. செ. ஞானவேல் இயக்கி வருகிறார். ஜெய்பீம் படத்துக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. 



வேட்டையன் படத்தில் ஏகப்பட்ட ஸ்டார்கள் குவிந்து கிடக்கின்றனர். அமிதாப் பச்சன் நடிக்கிறார். பஹத் பாசில், மஞ்சு வாரியர்,  துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர். லால் சலாம் படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம்தான் வேட்டையனையும் தயாரிக்கிறது. வழக்கம் போல அனிருத் இசையமைக்கிறார்.

கேரளாவில் ஆரம்பித்து அப்படியே நாகர்கோவில், நெல்லை, மும்பை என்று நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது புதுச்சேரி பக்கம் திரும்பியுள்ளது.  பழைய துறைமுகம் பகுதியில் ஷூட்டிங் நடந்தபோது ரஜினி படம் என்று தெரிந்து பெரும் கூட்டம் கூடி விட்டது.  ரஜினியும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கேரவன் வேனிலிருந்தபடி ரசிர்களைப் பார்த்து கைகூப்பி வணங்கியும், கை அசைத்தும் மகிழ்வித்தார்.

வேட்டையன் என்பது, சந்திரமுகி படத்தில் வரும் ஒரு கேரக்டர். அந்த கேரக்டரில் ரஜினிகாந்த் அசத்தியிருப்பார். இப்போது அதையே படத்தில் தலைப்பாக வைத்திருப்பதால் டபுள் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்