லக்னோ: ராம நவமி தினத்தில் நடந்த அதிசயம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி, ராமர் கோவிலில் ராமர் சிலையின் நெற்றில் பட்ட சூரிய ஒளியால் பக்தர்கள் திகைத்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில், கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பால ராமரை தரிசனம் செய்து ஆசி பெற்றனர். அதன் பின்னர் ஏராளமான பொது மக்கள் அங்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து ராமரின் ஆசியை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராமநவமி நாளான இன்று ராமர் கோவிலில் இன்று மதியம் சுமார் 12.16 மணிக்கு கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு நடைபெற்றது. சூரியனின் ஒளி ராமரின் நெற்றியில் திலகம் இட்டது போல் பட்டது. இந்த காட்சி சுமார் 5 நிமிடம் மட்டுமே நீடித்தது. இந்த அரிய நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி அனைத்து தரப்பினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒளி ராமர் நெற்றியில் படும் விதத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் ராம கோஷம் எழுப்பி ராமரை வழிபட்டனர். ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பால ராமர் மஞ்சள் நிற ஆடை அலங்காரத்தில் காட்சியளித்தார். ராமருக்கு 56 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}