தஞ்சாவூர்: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் நவாஸ் கனி மற்றும் மயிலாடுதுறை சுதா ஆகியோருக்கு அய்யம்பேட்டையில் பிரமாண்ட வாகன அணிவகுப்புடன் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அதன் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி பெருவெற்றி பெற்றார். அதேபோல, மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதா வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ளார்.

அவர்களுக்கு அய்யம்பேட்டை அஞ்சுமன் திருமண மண்டபத்தில் நேற்று இரவு பாராட்டு விழா நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா மௌலவி முஹம்மது ஷாகிர் ஜைனி கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட இணைச் செயலாளர் அப்துல் காசிம் ராஜாஜி, இணை பொருளாளர் ஜுல்பிகார் அகமது, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நூர் முகம்மது, முகம்மது சித்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அஞ்சுமன் அறிவகம் ஜபருல்லாஹ், வாலன் அக்பர், சுலைமான் பாட்சா, முகம்மது அலி, அப்துல் மாலிக், ஜெய்லான் பாட்சா, இல்யாஸ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தனர். மாவட்ட செயலாளர் கமாலுதீன் ஃபைஜி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் தொடக்க உரை நிகழ்த்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். எம்.பிக்கள் நவாஸ் கனி மற்றும் சுதா ஆகியோர் ஏற்புரை வழங்கினர். விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் சிறப்பு பேருரை ஆற்றினார்.
முன்னதாக, இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நகர எல்லையில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுப்போடு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி பிரைமரி உள்ளிட்ட பல்வேறு பிரைமரி, மாவட்ட மற்றும் அணிகளின் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து இருந்தனர். விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், ஏராளமான ஜமாஅத்தார்களும், உலமா பெருமக்களும், இந்தியா கூட்டணியின் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}