ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலில் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, வரும் ஜூன் நான்காம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் எனவும், அந்த நேரத்தில் கோவில் தீர்த்தங்களில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத கோவிலில் ராமாயண வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் ராமலிங்க பிரதிஷ்டை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது இத்தலத்தில் ராமாயண வரலாற்றை பக்தர்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக, ராமலிங்க பிரதிஷ்டை விழா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.இதில் ராமர், ராவணனை வதம் செய்த நிகழ்வு, விபீஷணர் பட்டாபிஷேகம், ராமலிங்க பிரதிஷ்டை போன்றவை இடம்பெறும்.
அந்த வகையில் இந்த வருடம் ராமலிங்கம் பிரதிஷ்டை விழா வரும் ஜூன் 3ம் தேதி தொடங்கி ஜூன் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி,ஜூன் 3ம் தேதி மாலை திட்டக்குடி பகுதியில் ராமன், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 5ம் தேதி மதியம் 12 மணிக்கு மேல் கோவிலின் முதல் பிரகாரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வரும் ஜூன் 4ஆம் தேதி கோவில் நடை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. மேலும் கோவில் நடை அடைக்கப்படும் நேரத்தில் கோயில் தீர்த்தங்களில் புனித நீராடவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}