- ஸ்வர்ணலட்சுமி
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஆங்கிலத்தில் இதனை "Rasthali banana" என்றும் ஹிந்தியில்" Rasbhari kela" என்றும் அழைக்கப்படுகிறது. ரஸ்தாளி வாழை பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ள கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் ஆகும்.
பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டாசியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள்,மக்னீசியம் போன்றவை அடங்கியுள்ளன. உண்பதற்கு ரஸ்தாளி மிகவும் சுவையாக இருக்கும் அதனால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். உண்பதற்கு சுவையாக இருப்பினும் இந்த பழம் வாத உடம்பு காரர்களுக்கு ஆகாது என்று கூறுவார்கள். இப் பழத்தை சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று திம்மென்று ஆகிவிடும். பசியை மந்தப்படுத்தும் தன்மை உடையது.

பாட்டி வைத்தியம் : வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த நன்கு கனிந்த ரஸ் தாளியை ஒரு டம்ளர் நீரில் நன்றாக பிசைந்து கரைத்துக் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும் என்று கூறுவார்கள். பலர் உணவு உண்டதும் ரஸ்தாளி பழம் உண்பதை பழக்கமாக வைத்திருப்பர். ஆனால் இப்படி உண்பது தவறு. சாப்பிட்டவுடன் இப் பழம் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
வளரும் குழந்தைகளுக்கு இப்ப பழத்தினை கொடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
முக்கிய பயன்கள்:
இப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் வயிற்று எரிச்சலை குறைப்பதுடன் அல்சருக்கு மிகவும் நல்லது. மேலும் கண்களுக்கு நல்லது என்றும் கண் பார்வை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க விரும்புவோர் இப்பழத்தை அளவாக எடுத்துக் கொள்ளலாம்.மன அழுத்தம் குறைக்கவும், மனதை அமைதி படுத்தவும் இப்ப பழம் பெரிய நன்மை பயக்கிறது. இப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் குளுக்கோஸ் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும்
உடல் சோர்வை நீக்கும், மன அழுத்தத்தை குறைக்கும், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
.
இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இப்பழத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடனடி ஆற்றலை வழங்குகின்றன. இது உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டியவர்களுக்கும் நன்மை பயக்கும்.
குறிப்பு :நீரிழிவு நோயாளிகள் இப்பழத்திணை அளவுடன் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். அதிலும் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் உடல் நலக் குறைபாடுகள் இருப்பின் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி அவர் ஆலோசனைப்படி சேர்த்துக் கொள்வது சிறந்தது.
மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}