சென்னை : ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது உடல்நிலைக்கு என்ன என்பது பற்றி பலரும் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். 67 வயதாகும் ஒடிசாவை சேர்ந்த இவர், தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இவர் முக்கிய பணிகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதத்துடன் இவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதற்கிடையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்ற கேள்விகளும் எழ துவங்கின. இந்நிலையில் சக்திகாந்த தாசின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசிற்கு அசிடிட்டி ஏற்பட்டதால் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். கவலைப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!
மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்
அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு
புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!
{{comments.comment}}