சென்னை: சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி.ரத்து செய்வதுடன் ரூ.25,000 அபராதமும், 25 வயது ஆகும் வரை ஓட்டுனர் உரிமமும் வழங்கப்படாது என்று புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
சாலை விபத்துக்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. எத்தனை வகையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளன. இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதனால் தான் அதிகளவில் விபத்துக்கள் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்களை தடுக்கும் பொறுட்டு புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் ஜூன் 1ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. மத்திய மோட்டார் வாகன சட்டம் 2019ஐ திருத்தத்தின்படி, இனிமேல் 18 வயதிற்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
அதன்படி, 18 வயது முடியாத சிறுவர்கள் கார் மற்றும் பைக் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்று எனப்படும் ஆர்.சி ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டி பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். அவர்களுக்கு 25 வயதாகும் வரை ஓட்டுனர் உரிமமும் வழங்கப்படாது. இந்த விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
சமீபத்தில் புனே நகரில் 17 வயது சிறுவன் போர்ஷ் காரை ஓட்டிச் சென்று இரண்டு பேரை அநியாயமாக ஏற்றிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் உடனடியாக விடுவிக்கப்பட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல இன்னொரு ஊரில் சிறுவன் ஒருவன், திடீரென ஆம்புலன்ஸை இயக்கி ஒரு பெண்ணை இடித்துத் தள்ளி காயப்படுத்திய சம்பவமும் நடந்தது. சிறார்கள் பலர் இப்போது டூவீலர்கள் ஓட்டியும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.
எத்தனை மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டப்போகுது தெரியுமா.... இதோ வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி இழிவான செயல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பீகார் சட்டசபை தேர்தல் 2025.. 2 கட்டமாக நவம்பர் 6, 11 ல் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
டாக்டர் ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் பார்க்கவில்லை - அன்புமணி: உடனிருந்து பார்க்கிறேன் - ஜிகே மணி
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஆளுநரின் பேச்சு.. விலாவரியாக விளாசித் தள்ளிய முதல்வர் ஸ்டாலின்.. பொசுக்கென்று பதிலடி தந்த தமிழிசை!
அதிரடி சரவெடி... புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 88,000த்தை கடந்தது
{{comments.comment}}