சென்னை: ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்தில் இணைந்துள்ளனர். பிகைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்.எஸ்.இயக்கத்தில் பிரபுதேவா, அஜூ வர்கிஸ், அர்ஜூன் அசோகன்,ரெடின் கிக்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, லொள்ளுசபா சாமிநாதன், குக்வித்கோமாளி தீபா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் காமெடி நடிகர் யோகி பாபு முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான்- பிரபுதேவா இணையும் ஆறாவது படம் இதுவாகும். இதற்கு arrpd-6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளது. மார்ச் மாதம் தொடங்கிய இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான்- பிரபுதேவா 1994ம் ஆண்டு காதலன் படத்தின் மூலம் இணைந்தார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதற்கு அடுத்து ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ, லவ் பர்ட்ஸ், மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் இவர்கள் கூட்டணியில் வெளியான ஊர்வசி, முக்காபுலா, ரோமீயோ ஆட்டம் போட்டால், வெண்ணிலவே, பேட்ட ரேப் உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்த இருவரின் கூட்டணியில் இந்த முறை எந்த மாதிரியான பாடல்கள் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும், இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}