என்னது ராகுல் காந்திக்கு கல்யாணமா?.. யாரு பார்த்த வேலை இது?.. தீயாய் பரவும் இன்விடேஷன்!

Apr 25, 2023,12:15 PM IST

டில்லி : இந்தியாவின் most eligible bachelor என வர்ணிக்கப்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் போட்டோ உடன் அச்சிடப்பட்டுள்ள நான்கு பக்க திருமண வரவேற்பு அழைப்பிதழ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. என்னது ராகுல் காந்திக்கு கல்யாணமா? என அனைவரும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 52 வயதாகிறது. இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அரசியலில் பிஸியாக இருப்பதால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என பலரும் கூறி வருகின்றனர். இதை வைத்தே எதிர்க்கட்சிகள் ராகுலை கிண்டலும் செய்து வந்தன. இந்நிலையில் நான்கு பக்கத்திற்கு அச்சிடப்பட்ட ராகுல் காந்தியின் சிரித்த முகத்துடனான போட்டோ உடன் கூடிய திருமண வரவேற்பு அழைப்பிதழ் செம வைரலாகி வருகிறது.

இந்த நான்கு பக்க அழைப்பிதழின் முதல் பக்கத்தில் ராகுல் காந்தியின் போட்டோவும், இரண்டாவது பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் போட்டோவும், மூன்றாவது பக்கத்தில் சோனியா காந்தியின் போட்டோவும், நான்காவது பக்கத்தில் பிரியங்கா வதேராவின் போட்டோடும் இடம்பெற்றுள்ளது. அழைப்பிதழின் பின்புறத்தில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் போட்டோவும் அச்சிடப்பட்டுள்ளது. 



இதை முழுவதுமாக பார்த்தவர்கள், அப்போது ராகுலின் திருமண அழைப்பிதழ் இல்லையா என ஏமாற்றத்துடன் கேட்டு வருகிறார். விசாரித்ததில் இது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் மகள் காஞ்சனாவின் திருமண வரவேற்பு அழைப்பிதழாம். இவர் வினோத் ரங்கநாதன் என்பவரை மணந்து கொள்ள போகிறார். இவர்களின் திருமண வரவேற்பு அழைப்பிதழில் தான் முதல் பக்கத்தில் மணமக்கள் பெயர் எதுவும் இல்லாமல், ராகுலின் போட்டோ மட்டும் அச்சிடப்பட்டு, திருமண வரவேற்பு அழைப்பிதழ் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் கே.எஸ்.அழகிரியின் போட்டோ மிக சிறியதாக ராகுல் காந்தியின் போட்டோவுக்கு கீழ் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் பெரிதாக இருக்கும் ராகுலின் போட்டோ மட்டுமே எல்லோருக்கும் பளிச்சென தெரிவதால் அனைவரும் அவருக்கு தான் திருமணம் என நினைத்ததால் இந்த அழைப்பிதழ் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் எம்பி., பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் எம்பி பதவியும் இல்லாமல், அரசு பங்களாவையும் காலி செய்து விட்டு, தனது அம்மா சோனியா காந்தியின் பங்களாவில் வசித்து வருகிறார் ராகுல் காந்தி. தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுலால் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் திருமண வாழ்க்கையில் இறங்க முடிவு செய்து விட்டாரோ என நினைத்து தான் அனைவரும் ஆர்வமாக இந்த அழைப்பிதழை வைரலாக்கி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்