சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 20 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மே 17 ,18 ,19, 21 ஆகிய நான்கு நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் கன முதல் மிக கனமழைக் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பரவலாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. இதனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் முழுமையாக தணிந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் ஒரு சில இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். குறிப்பாக மே இருபதாம் தேதி 21 சென்டிமீட்டர்க்கு மேல் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம்.
அதனால் மே 20ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், இன்று(17),18, 19, 21, ஆகிய நான்கு நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர கர்நாடகாவில் இன்று கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கேரளாவில் இன்று கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கும், மே 20 ஆம் தேதி அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}